About Us
கலை பிரியர்களே ஒரு கணம் சிந்தியுங்கள்
திறமை
ஒரு சாராருக்கு சொந்தமாந்தல்ல. கலைத்திறமை எல்லா இனங்களிடமும் உண்டு. அந்த திறமையை
இனம் கண்டு ஊக்குவித்து தரமான கலைப்படைப்புக்களை வெளிக்கொணரவேண்டியது அந்த இனத்தின்
ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
போர்,புலம்பெயர்வென
அனுபவங்களுக்கூடாக ஆயிரமாயிரம் கதைகளை சுமந்துகொண்டு அலைபவர்கள் நாங்கள். அவ் அனுபவங்களை
கலைத்துவமான படைப்புக்களாய் நம்மவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இசை
நாடகம் திரைப்படம் என எல்லாதுறையியும் ஈழதமிழ்ர்கள் கால் பதித்தது மட்டுமல்ல பல காத்திரமான
படைப்புக்களை தந்துமிருக்கிறார்கள். ஆனாலும் இனம் ஒத்துழைப்பு தராததால் ஆற்றலுள்ள படைப்பாளிகளின் படைப்பூக்கம் பொருளாதார நெருக்கத்தால் தடைப்பட்டு அதனால் செழுமையான ஈழதமிழ் படைப்பாக்க தளத்தை உருவாக்கி
வளர்க்க முடியாத நிலையிலுள்ளோம். தொடர்ச்சி இருக்கும் பட்சத்தில்தான் நம் மத்தியிலும்
தொழில்சார் நிபுணத்துவத்தையும் கலைத்துவத்தையும் வளர்த்துகொள்வதோடு புதிய தலைமுறை கலைஞர்களையும்
உருவாக்கிகொள்ளமுடியும்.
எப்படி
பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் கனடாவில் படம் எடுக்க முடியாமல் அமெரிக்கா சென்று
ரைரானிக் திரைப்படத்தை எடுத்து ஆஸ்கார் விருது பெற்றாரோ, அதேபோல்தான் எமது ஈழத்து இயக்குனர்
பாலு மகேந்திரா இந்தியா சென்று மூன்றாம்பிறை, வீடு போன்ற படங்களுக்கு தேசிய விருது
பெற்றார். எம்மிடம் திறமையுள்ளது என முதலில் நம்பவேண்டும்.
எம்
கதைகளை சிறந்த படைப்புக்களாய் உருவாக்ககூடிய கலைஞர்கள் எம் மத்தியில் இருக்கிறார்கள்.
கலைக்கான தேடலுடன் பல கலைஞர்கள் எம் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.நமது கதைகளை நாளைய
சந்ததிக்கு நமது படைப்புக்களுக்கூடாகவே விட்டுசெல்ல முடியும். நமது நினைவுகளிலிருந்து
நமது கதைகள் மறந்து போவதற்கெதிராய் நாம் செயற்படவேண்டும். நாளயும் நமது கதைகளை படைப்புக்களுக்கூடாக
மானுடம் அறியும் வகை செய்யவேண்டும். அதற்கு இனம் உதவவேண்டும். கலையால் கலைஞன் வாழும்
நிலைவரும்போதுதான் கலை வளரும். ஒரு கலைஞன்
கலையை நம்பி வாழும் நிலையை உருவாக்க வேண்டும். தரமான படைப்புக்களை ஊக்குவித்து நம்
கலைஞர்களை வளர்க்கும் இருவழி செயற்பாடு ஆரோக்கியமான
ஈழதமிழ் கலைத் தளத்திற்கு அவசியம்.
எம்
கதை புரொடக்சனின் நோக்கமும் அதுதான். இது இலாப நோக்கமற்ற முறையில்படைப்பூக்கதளத்தை
வள்ர்த்தெடுக்கும் முயற்சி. ஒருமுறை தரமான
திரைப்படத்தை எடுத்தவன் அடுத்த படத்தை எடுப்பதற்கான ஆதரவை திரட்டும் தளம். ஈழத்தமிழர்களெடுத்த
தரமான திரைப்படங்களை உங்கள் இல்லங்களுக்கு OTT Platform ஊடாக எடுத்து வருகிறோம். நீங்கள்
அவற்றை பார்ப்பதினூடாக நம் திரைப்படதுறைக்கான
பொருளாதார வளத்தை உருவாக்கி கொள்ளவும் , அடுத்தடுத்த படைப்புக்கள் உருவாவதற்கான உத்வேகம் பெறவும் வழிவகுக்கும் எனவும் நம்புங்கள்.
நீங்கள்
செலுத்தும் தொகை மிக சிறிது. ஆனால் அது இன்னொரு திரைப்படத்திற்கான அத்திவாரம் என நினையுங்கள்.
நீங்கள் செலுத்தும் சிறிய கட்டணத்தின் சிறு பகுதி தளத்தின் செலவுக்காக போக மிகுதி படத்தின்
தயரிப்பாளருக்கு போய் சேரும் என் உறுதியளிக்கிறோம்.
Em
Kathai Productions Inc ஈழத்தமிழர்களின் வாழ்வியலையும், வேதனைகளையும், வலிகளையும் சொல்லும்
கலைப்படைப்புக்களை எடுத்துவரும் தளம். எந்த நாட்டிலிருந்தும் தயாரிக்கபடும் எமது வலிகளையும்
வாழ்வியலையும் சொல்லும் திரைப்படங்கள் இந்த தளத்தில் வரும்.